நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கு வாடகை இல்லா வீடு - ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

மூத்த அரசியல்வாதி நல்லகண்ணு, கக்கன் குடும்பத்தினருக்கும் 1954-ம் ஆண்டு கட்டப்பட்ட வீடுகள் என்பதால் அதற்கு மாற்று வீடுகள் ஏற்பாடு செய்யப்பட்டது என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கு வாடகை இல்லா வீடு - ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு
நல்லகண்ணு மற்றும் கக்கன்
  • News18
  • Last Updated: July 18, 2019, 2:53 PM IST
  • Share this:
மாபெரும் தலைவர்கள் நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கு விரும்பும் இடத்தில் வாடகை இல்லாத வீடு ஒதுக்கப்படும் என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் தீர்மானம் கொண்டுவந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, மூத்த அரசியல்வாதி நல்லகண்ணு வசித்திருந்த வீட்டை காலி செய்ய சொல்லியதாகவும், அவருக்கு புது வீடு ஒதுக்கப்பட்டுவிட்டதா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு ஒதுக்கப்பட்ட வீடு அவரது மறைவுக்கு பிறகு மனைவிக்கும், மனைவிக்கு பிறகு மகன்களுக்கும் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார்.


அதே போல மூத்த அரசியல்வாதி நல்லகண்ணு, கக்கன் குடும்பத்தினருக்கும் 1954-ம் ஆண்டு கட்டப்பட்ட வீடுகள் என்பதால் அதற்கு மாற்று வீடுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னதாக தாமாக முன்வந்து நல்லகண்ணு வீட்டை காலி செய்துவிட்டதாகவும், இருப்பினும் அந்த வீட்டை வீட்டுவசதி வாரியத்திடம் இன்னமும் ஒப்படைக்கவில்லை என தெரிவித்தார்.

இப்பிரச்சனை வந்த போது, அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர்களை யாரும் கட்டாயப்படுத்தி வெளியேற்றவில்லை. அவ்வாறு வந்த செய்திகள் தவறு என்றார்.

Loading...

கக்கனின் வாரிசுகள், மூத்த அரசியல்வாதி நல்லகண்ணு ஆகிய மாபெரும் தலைவர்களுக்கு விரும்பும் இடத்தில் வாடகை இல்லாத வீடுகள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் அதற்கு அரசு கடமைப்பட்டிருப்பதாகவும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Also see...

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...