அரசு அதிகாரிகளை மிரட்டும் திமுகவினரை முதல்வர் கண்டிக்க வேண்டும் - ஓபிஎஸ்

ஓ பன்னீர்செல்வம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

 • Share this:
  கொரோனா பேரிடர் காலத்தில் அரசு பணியாளர்களுக்கு இடையூறு கொடுத்தும், மிரட்டும் வகையில் நடந்து கொள்ளும் திமுகவினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டுமென்று ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் தொற்று நோய் தடுப்பு பணியில் நன்கு பயிற்சி பெற்ற களப்பணியாளர்கள், சுகாதாரம், பொறியியல், வருவாய் துறை பணியாளர்களுடன் இணைந்து திறம்பட பணிபுரிந்து வருகின்றனர்.

  இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் திமுகவினர் சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று தற்போது இருக்கும் களப் பணியாளர்களை நீக்கிவிட்டு அவர்கள் சொல்லும் நபர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று மிரட்டி இருப்பதாகவும், அதற்கு அதிகாரிகள் கட்சிகளின் பரிந்துரையின் பேரில் களப் பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படுவதிலலை என்று தெரிவித்ததாகவும், பயிற்சி பெற்று திறம்பட பணியாற்றிக் கொண்டிருக்கும் தற்போதைய களப் பணியாளர்களை மாற்றியமைத்தால் நோய்த் தடுப்பு பணியில் தொய்வு ஏற்படும் என்று எடுத்து கூறியுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வெளி வந்துள்ளது.

  Also Read : தமிழகத்தில் 2-வது நாளாக குறைந்து வரும் கொரோனா தொற்று

  இதுப்போன்ற முறையை அனைத்து இடங்களிலும் திமுகவினர் கடைப்பிடித்தால் கொரோனா நோய் தடுப்பு பணயில் தொய்வு ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருக்கும் முதல்வருக்கும் அவப்பெயர் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

  முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கேட்டுக் கொள்கிறேன் என்றுள்ளார்.
  Published by:Vijay R
  First published: