தேர்தல்களில் தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த அ.தி.மு.கவிற்கு திருஷ்டி கழிக்கும் விதமாக 2019-ம் மக்களவைத் தேர்தலில் மக்கள் முடிவு வழங்கியுள்ளனர் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள், ஜூலை 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டத் தொடரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து, ஜூலை 30-ம் தேதி வரை என 23 நாட்களுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ச்சியாக துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றன.
இறுதி நாளான இன்று, சட்டப்பேரவையில் நிதித்துறை மற்றும் வீட்டுவசதித்துறை மீதான விவாததம் நடைபெற்றது. அதற்கு பதலளித்துப் பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ’சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியமைத்த சாதனையை அ.தி.மு.க படைத்தது. அதேபோல, உள்ளாட்சித் தேர்தல், கூட்டுறவுத்தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றது.
தொடர்ந்து, 2011 முதல் பல்வேறு வெற்றிகளைக் குவித்த அ.தி.மு.கவிற்கு திருஷ்டி கழிக்கும் வகையில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவை மக்கள் வழங்கியுள்ளளனர். இருப்பினும் தேனி தொகுதியை மட்டும் நாங்கள் விட்டுவிடவில்லை. 2021-ம் ஆண்டு வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆளுங்கட்சியே மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து ஹாட்ரிக் சாதனையை நடத்திக் காட்டுவோம்’என்று தெரிவித்தார்.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.