அனைவரிடத்திலும் பாசம் காட்டக்கூடியவர், உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் துரைமுருகன் என எதிக்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டமன்றத்தில் பாராட்டி பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் 50 ஆண்டுகள் பங்கேற்று பொன்விழா நாயகனாக துரைமுருகன் வலம் வருகிறார் என்று கூறி, பாராட்டு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன் இடத்தில் வைத்து பார்க்கிறேன் என்றும், துரைமுருகனை கருணாநிதி அவர்கள், துரை துரை என்று அழைப்பார். புன்னகை எப்போதும் அவரது முகத்தில் இருக்கும் என்று கூறினார்.
மேலும், நூற்றாண்டு சட்டப்பேரவையில், அரை நூற்றாண்டுக்கு முன்னர் வந்தவர் துரைமுருகன். தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதி, பேராசிரியர், மறைவுக்குப் பிறகு எனக்கு வழிகாட்டியாக இருந்து கொண்டிருப்பவர் துரைமுருகன். மனதில் பட்டதை பேசக்கூடியவர் என்றும் கூறிய மு.க.ஸ்டாலின், இந்த தீர்மானத்திற்கு கட்சி பாகுபாடின்றி அனைவரும் முன்வந்து ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது, மு.க.ஸ்டாலின் பேச்சைக் கேட்டு கண்கலங்கினார் துரைமுருகன்.
இந்நிலையில், எதிக்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் துரைமுருகனை பாராட்டி பேசுகையில், “50 ஆண்டு காலம் என்பது நீ்ண்ட நெடிய வரலாறு. 10 முறை சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் துரைமுருகன். அனைவரிடத்திலும் பாசம் காட்டக்கூடியவர். ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர். உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தகாரர்தான் துரைமுருகன்.

துரைமுருகன்
சட்டமன்ற வரலாற்றில் உறுப்பினர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதற்கு இலக்கணமாக செயல்படக் கூடியவர். அவரிடம் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டுள்ளேன். வாதங்களில் சூடாக பேசுவார். உடனே தணிந்து இனிமையாக பேசுவார். அதிமுக உறுப்பினர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார். இந்நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Must Read : பொன்விழா நாயகன் : சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதைக் கேட்டு கண்கலங்கிய துரைமுருகன்
அதனைத் தொடர்து பேசிய துரைமுருகன், “வாழ்நாளில் ஆயிரக்கான மேடைகளில் பேசி இருக்கிறேன். வார்த்தைக்காகவும், பொருளுக்காகவும் யோசித்தது இல்லை. ஆனால் இன்றைக்கு எனக்கு பேச வார்த்தைகள் இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எத்தனையோ வெற்றி தோல்விகள் நடைபெற்றிருந்தாலும், என் தலைவர் இன்றைக்கு கொண்டு வந்த தீர்மானத்தில் அனைத்து கட்சிகளும் பாராட்டியுள்ளனர். இந்தத் தீர்மானம் வருமென்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நான் சாதாரண கிராமத்தைச் சேர்ந்தவன், விவசாயி மகன்” என்று கூறி நெகிழ்ந்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.