என் உயிர்போகும் நாளில் கூட என் உடல் மீது அ.தி.மு.கவின் கொடி போர்த்தப்படுவதையே என் வாழ்நாளில் பெருமையாக, லட்சியமாக கொண்டு வாழ்கிறேன் என்று துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் பா.ஜ.கவில் இணைந்துவிடுவார் என்று அ.மு.ம.கவைச் சேர்ந்த தங்கத் தமிழச் செல்வன் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஓ.பன்னீர் செல்வம், ‘அ.தி.மு.கவின் ஒரு சாதரண தொண்டனாக பொது வாழ்க்கையில் பணியாற்றிய என்னை, பெரியகுளம் நகராட்சித் தலைவராகவும், சட்டப்பேரவைக்குள் நுழையும் வாய்ப்பையும், அமைச்சராகவும் முதல்வராகவும் ஆவதற்கான வாய்ப்புகளை வழங்கி, நான் கனவிலும் எதிர்பார்க்காத உயரங்களைத் தந்த அ.தி.மு.கவை விட்டு நான் பா.ஜ.கவுக்கு செல்லப்போகிறேன் என்று ஒரு அடுக்காத புரளியை அவதூறாக பரப்பிவருகின்றன சில உள்நோக்கம் கொண்ட ஊடகங்கள்.
நான் வணங்கும் அம்மா, அரசியல் ரீதியாக தேர்தல் களத்தில் எதிர்நிலைகள் கொண்டபோதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மோடியைப் பாராட்டினார். ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த பாதத் தடத்தில்தான் இந்த முறை பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தோம். உயிர்போகும் நாளில் என் உடலில் அ.தி.மு.கவின் கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக, லட்சியமாக கொண்டு வாழும் என்னை, கட்சிமாறப் போகிறேன், வேறு கட்சிக்கு போகப் போகிறேன் என்றெல்லாம் வடிகட்டிய பொய்யை வதந்திகளாக்கி அதனை இந்திய விடுதலைக்கு குரல் கொடுத்த ஊடகங்கள் கூட நடுநிலை என்பதை மறந்து யாருக்கோ வால் பிடித்து புரளியால் குறளி வித்தை செய்வதை நினைத்து மிகுந்த வேதனையடைகிறேன்.
என்மீதான, பொய் குற்றச்சாட்டுகளை கழகத் தொண்டர்களும், என் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழக மக்களும் ஏற்கமாட்டார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: O Panneerselvam