பதவி சுகத்துக்காக உரிமைகளை பறிகொடுத்த கட்சி திமுக - ஓ. பன்னீர்செல்வம் விமர்சனம்
பத்தாண்டு காலமாக மக்களின் வெறுப்பை பெறாத நல்லாட்சியை அதிமுக தந்து கொண்டிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம்
- News18 Tamil
- Last Updated: January 20, 2021, 8:31 AM IST
பதவி சுகத்துக்காக தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்த கட்சி திமுக என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை கண்ணகி நகரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஓ பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் அமைதி காத்த கட்சி திமுக என்று பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். திமுக செய்த அட்டூழியங்கள் ஏராளம் என்றும் ஸ்டாலினால் எந்த காலத்திலும் முதல்வராக வரவே முடியாது என்றும் பன்னீர்செல்வம் பேசினார்.
மேலும் படிக்க... சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலை - கர்நாடகா சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜெயலலிதாவின் நலத்திட்டங்கள் அனைத்தும் இந்த ஆட்சியிலும் எந்த குறையும் இல்லாமல் கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறினார்.
பத்தாண்டு காலமாக மக்களின் வெறுப்பை பெறாத நல்லாட்சியை அதிமுக தந்து கொண்டிருக்கிறது என்றும் ஓ பன்னீர்செல்வம் பேசினார். அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான் என்றும் திமுகவை அப்புறம் படுத்துவதற்காகவே அதிமுக உருவாக்கப்பட்டது என்றும் ஓ பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை கண்ணகி நகரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஓ பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் அமைதி காத்த கட்சி திமுக என்று பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். திமுக செய்த அட்டூழியங்கள் ஏராளம் என்றும் ஸ்டாலினால் எந்த காலத்திலும் முதல்வராக வரவே முடியாது என்றும் பன்னீர்செல்வம் பேசினார்.
மேலும் படிக்க... சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலை - கர்நாடகா சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு