முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்... தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கடிதம்...

நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்... தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கடிதம்...

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

OPS : இபிஸ் மூலம் நடைபெற்ற நிர்வாகிகள் நியமனம் செல்லாது, இன்று வரை நான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தன் அனுமதி இல்லாமல் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருப்பதால் அதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது - இபிஎஸ் நியமித்த நிர்வாகிகள் பட்டியலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். 

ஏற்கனவே அதிமுக பொதுக்குழு செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என்றும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் புதன்கிழமையன்று எடப்பாடி பழனிச்சாமி துணை பொதுச்செயலாளர்களாக கேபி.முனுசாமி நத்தம் விஸ்வநாதன்,  11 அமைப்புச் செயலாளர்கள்., பொன்னையனை எம்ஜிஆர் மன்ற செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில், சட்ட விதிகளுக்கு எதிராக இந்த நியமனங்கள் இருப்பதாகவும் இதற்கு தேர்தல் ஆணையம் எந்த ஒரு அங்கீகாரமும் வழங்க கூடாது என்றும் ஏற்கனவே நீதிமன்றத்திலும் இது குறித்து வழக்குகள் இருப்பதால் இந்த நியமனம் செல்லாது என குறிப்பிட்டிருந்தார்.

Also see... ஒற்றைப் பதவி கோரிக்கையை ஏற்கக்கூடாது- தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்

மேலும், ஏற்கனவே பொது குழு தொடர்பான கடிதங்கள் மற்றும் நியமனங்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருப்பது தொடர்பாகவும் அதன் வழக்குகள் குறித்தும் ஓபிஎஸ் அந்த கடிதத்தில் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: ADMK, Election Commission, OPS