சட்டப்பேரவையில் ‘நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு’ என தான் பாடிய பாடலுக்கான அர்த்தம் மிகவும் ரகசியமானது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கடந்த சனிக்கிழமையன்று வேளாண்மை, பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் இதன் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், வேளாண் சட்டத் திருத்தங்களை எதிர்க்கும் விவகாரத்தில், நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு இதுவே என் நிலை என்று குறிப்பிட்டார். மேலும் தனது நில சட்டப்பேரவையின் முன்னவர் துரைமுருகனுக்கு நன்றாகத் தெரியும் என்றும் பன்னீர் செல்வம் கூறினார்.
சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வம் சுட்டிக்காட்டிய இந்த பாடல் வரிகளுக்கு வேளாண் சட்டத்தை தாண்டி பல்வேறு அர்த்தங்கள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோரை மனதில் வைத்து பன்னீர் செல்வம் இந்த கருத்தை தெரிவித்திருக்கலாம் என்றும் ஒருசிலர் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கைது!
இந்நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் மசோதாவை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு, சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். அப்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க: தரக்குறைவான பதிவு - படிக்காமல் ஃபார்வேர்டு செய்வீர்களா? எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் கேள்வி
அதன்பின்னர் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வத்திடம் , நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ரகசியம்.. பரம ரகசியம்” என்று பன்னீர் செல்வம் பதிலளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.