ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் பாலமுருகன் காலமானார்!

ஓ.பன்னீர்செல்வம்

திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் நேற்றிரவு பெரியகுளம் கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார்.

  • Share this:
தமிழக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் உடல்நலக்குறைவால் காலமானார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்திற்கு ராஜா, சுந்தர், பாலமுருகன் என 3 சகோதர்களுள் உள்ளனர். ஏற்கனவே ஒரு மூத்த சகோதரர் காலமாகிவிட்ட நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் 2வது சகோதரரான பாலமுருகன் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார்.

திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் நேற்றிரவு பெரியகுளம் கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் தென்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு உறவினர்கள், அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சகோதரரின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்த ஓ.பன்னீர் செல்வம், அவரது மகன் எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து பெரியகுளம் புறப்பட்டு சென்றனர்.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு ஜூலையில் விமானப் படை விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டு பாலமுருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்:

ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தொலைபேசியில் ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
Published by:Arun
First published: