ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ இன்பதுரை மீது அதிருப்தி: நிர்வாகிகள் இல்லத்துக்கே சென்று சமாதானம் பேசும் முயற்சியில் ஓ.பன்னீர் செல்வம்

ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ இன்பதுரை மீது அதிருப்தி: நிர்வாகிகள் இல்லத்துக்கே சென்று சமாதானம் பேசும் முயற்சியில் ஓ.பன்னீர் செல்வம்

ஓ.பன்னீர் செல்வம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ இன்பதுரைக்காக கட்சி நிர்வாகிகள் இல்லத்துக்கே சென்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் சமாதானம் பேச முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 • Share this:
  திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.கவை சேர்ந்த ஐ.எஸ்.இன்பதுரை இருந்துவருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் அப்பாவு இவரது வெற்றி செல்லாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கு தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட இன்பதுரை விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு உள்ளூர் கட்சி பிரமுகர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயண பெருமாள், அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஏ.கே.சீனிவாசன் போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினருக்கும் கட்சியினருக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் அழகானந்தம் இல்ல திருமணத்திற்காக நெல்லை வந்த தமிழக துணை முதலமைச்சரும் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திருமண விழாவில் பங்கேற்ற கையோடு நாராயணப் பெருமாளின் வீட்டிற்கே சென்று அங்கு இன்பத் துரைக்கு எதிராக செயல்படுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது வள்ளியூர் மற்றும் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இன்பத் துரைக்கு சீட் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

  ஓ.பன்னீர் செல்வம்


  எனினும் கட்சித் தலைமை தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரைக்கு மீண்டும் சீட்டு வழங்கும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கு எதிராக செயல்படும் கட்சியினரை கழக ஒருங்கிணைப்பாளர் சமாதானப்படுத்திவிடுவார் நிச்சயமாக போட்டியிட வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே துணை முதலமைச்சரை வரவேற்று நாளிதழ்களிலும் சுவரொட்டிகளிலும் நல்வரவு.. வருக.. என்ற வாசகத்தை இன்பதுரை பயன்படுத்தியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: