முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 9-ஆக குறைவு

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 9-ஆக குறைவு

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு தரப்பும் இடையை உள்ள மோதல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இருதரப்பினரும் தங்களது ஆதரவாளர்களிடையே தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

தற்போது, தேனி மாவட்டச் செயலாளர் சையது கான், சென்னை தெற்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் வேளச்சேரி அசோக், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் அசோகன், திருவள்ளூர் வடக்கு மா.செயலாளர் சிறுணியம் பலராமன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெள்ளமண்டி நடராஜன், தஞ்சாவூர் தெற்கு வைத்தியலிங்கம், வடக்கு சுப்ரமணி, பெரம்பலூர் ராமச்சந்திரன், அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் ஆகிய மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே தற்போது ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர்.

இதுவரை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருந்த நெல்லை மாவட்டச் செயாலளர் தச்சை கணேஷ ராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன், திருவள்ளுவர் தெற்கு மாவட்டச் செயலாளர் அலக்சாண்டர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று ஆதரவளித்துள்ளனர்.

ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக 12 மாவட்டச் செயலாளர்கள் உள்ளதாக வைத்தியலிங்கம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 9 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: ADMK, O Panneerselvam