ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒற்றைத் தலைமை விவகாரம்: ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டம்

ஒற்றைத் தலைமை விவகாரம்: ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டம்

ஒற்றைத் தலைமை விவகாரம்: ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டம்

அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பை ஓ.பன்னீர் செல்வத்துக்கு வழங்கவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நேற்றைய தினம் அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

  இந்த கூட்டத்தில் பெரும்பாலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியில் மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்கிற கோரிக்கையை கட்சித் தலைமையிடம் முன்வைத்துள்ளனர். இதனால் மீண்டும் ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் சர்ச்சையாக எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அருகேயும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

  சமீப காலமாக அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என ஒரு கருத்து எழுந்துள்ள நிலையில் அது கட்சிக்குள்ளும்எழுந்த ஒரு காரணத்தினால் இந்த ஒற்றைத் தலைமை என்கிற கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானத்தை கொண்டு வரவும் பெரும்பாலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

  நேற்று ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்தநிலையில் இன்று ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமி அவர்களது இல்லத்தில் தனித்தனியாக அவர்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் தனியாக நடைபெற்ற ஆலோசனையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், கோவை சத்யன் ஆகியோர் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதேபோல, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்தனர்.

  இந்தநிலையில், சென்னையிலுள்ள பசுமை வழிச்சாலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.

  Published by:Karthick S
  First published:

  Tags: ADMK, O Panneerselvam