Home /News /tamil-nadu /

ராமனுக்கு-பரதன், ஜெயலலிதாவிற்கு-ஓபிஎஸ் - தலைமையேற்க கோரும் போஸ்டரால் பரபரப்பு

ராமனுக்கு-பரதன், ஜெயலலிதாவிற்கு-ஓபிஎஸ் - தலைமையேற்க கோரும் போஸ்டரால் பரபரப்பு

ஓ.பன்னீர் செல்வம்

ஓ.பன்னீர் செல்வம்

திருநெல்வேலியில் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க தலைமையேற்க வேண்டும் என ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமாயண இதிகாசத்தில் பரதன் ராமபிரானின் காலணிகளை வைத்து ஆட்சி செய்தார். அவரது பெயரை மேற்கோள்காட்டி அதிமுகவின் ஒற்றை தலைமையாக பதவி ஏற்க வருமாறு ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுத்து நெல்லை மாநகர பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் கட்சி துவங்கி குறுகிய காலத்திற்குள் ஆட்சிக்கு வந்த ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். 1949ல் துவங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தால் 1967ஆம் ஆண்டு தான் ஆட்சிக்கு வர முடிந்தது. ஆனால் எம்ஜிஆர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை 1972-ல் துவக்கினார். 1974 இல் நடைபெற்ற திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று இயக்கத்தை வலுவாக்கினார்.

1977 ஆம் ஆண்டு கட்சி சந்தித்த முதல் பொதுத் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பில் ஏறியது, தொடர்ந்து நடைபெற்ற மூன்று பொதுத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றது. கட்சி துவங்கி 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் கட்சி ஆட்சி பொறுப்பில் இருந்து உள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் போஸ்டர்


எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா அக்கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா என ஒற்றை தலைமையின் கீழ் இயங்கிய அதிமுக, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல், ஒற்றைத் தலைமை தான் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் தற்போது வெளி வர துவங்கி உள்ளது.

இந்த பிரச்சனை விசுவரூபம் எடுத்து வரும் நிலையில் சென்னையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ஒற்றைத் தலைமைக்கு பெரும்பான்மையோர் ஆதரவு தெரிவித்ததாகவும், அந்த ஒற்றைத் தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும் என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அடிக்கோடிட்டு காட்டினார். இதனை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி தொண்டர்களும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டிக் கொள்வதாக ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.

எனினும் இரு தலைவர்களும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை மாநகர் பகுதிகளில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பதை வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ராகுல் காந்தி விவகாரம்: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கைது

அதில் ராமாயண இதிகாசத்தில் தசரத சக்ரவர்த்தி இடம் கைகேயி பெற்ற வரத்தின்படி, ராமர்-சீதை மற்றும் இலக்குவனுடன் 14 ஆண்டுகள் வனவாசம் புரிகையில், அயோத்தி நகரத்தை ராமரின் காலணிகளை வழிபட்டு, அதனையே சிம்மாசனத்தில் வைத்து துறவிக் கோலத்தில் கோசல நாட்டை ஆட்சி செய்த பரதனின் பெயரை மேற்கோள் காட்டி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட நிகழ்கால பரதனே என்ற வாசகமும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, ராமாயண இதிகாச பரதனை ஒப்பிட்டு நெல்லை நகர்ப் பகுதிகளில் ஒட்டிய போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: ADMK, O Panneerselvam

அடுத்த செய்தி