ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் மண்டபத்தை சுற்றி திரண்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்- இ.பி.எஸ்ஸை வரவேற்று வைத்த பேனர்கள் கிழிப்பு

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் மண்டபத்தை சுற்றி திரண்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்- இ.பி.எஸ்ஸை வரவேற்று வைத்த பேனர்கள் கிழிப்பு

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள்

சென்னையை ஒட்டிய வானகரதில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னையை ஒட்டிய வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் நாளை பொதுக்குழுவில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ஓபன்னீர் செல்வம் தரப்பு ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்தை நோக்கி வந்தனர்.

அவர்களை அங்கு பாதுகாப்பு பனியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து

திருமண மண்டபம் வரை அனுமதித்தனர்.

அங்கு சென்றவர்கள் இங்குநடக்கும் பணிகளை பார்க்க செல்ல வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையையடுத்து அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியவாறு அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு- தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்றம்

மேலும் நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வருவார்கள் என்றும் ஏற்பாடுகள் எப்படி உள்ளது என்பதை பார்க்க வந்ததாகவும் ஆனால் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என தெரிவித்தனர். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். அவர்கள் சென்ற பிறகு எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள் சிலவை கிழிக்கப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்: கன்னியப்பன்.

Published by:Karthick S
First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, O Panneerselvam