சட்டமன்ற தேர்தலில் தவறான தேர்தல் வியூகத்தால்
அதிமுக ஆட்சியை இழந்ததாகவும், வருங்காலத்தில் அந்த தவறுகள் சரிசெய்யப்படும் என்றும் அ
திமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம், மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு நல்ல பெயர் உள்ளதாகவும், ஆனால் திமுகவினருக்கு அப்படி இல்லையென்றும் கூறினார்.
தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப் போயுள்ளதாகவும், மின்சார தட்டுப்பாடு நிலவுவதாகவும் குற்றம் சாட்டிய அவர், மக்களைப் பற்றி கவலைப்படாத கட்சியாக திமுக இருப்பதாகச் சாடினார். கடந்த அதிமுக ஆட்சியின் மீது எந்த குற்றமும் குறையும் சொல்ல முடியாது என்றும், சட்டமன்ற தேர்தலில் தவறான தேர்தல் வியூகத்தால் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.