Home /News /tamil-nadu /

தமிழகத்தில் அண்ணாவின் இரட்டை மொழிக் கொள்கை ஆதாரமாக உள்ளது- ஓ.பன்னீர் செல்வம் உறுதி

தமிழகத்தில் அண்ணாவின் இரட்டை மொழிக் கொள்கை ஆதாரமாக உள்ளது- ஓ.பன்னீர் செல்வம் உறுதி

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்துக்கு அண்ணாவின் இரட்டை மொழிக் கொள்கைதான் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தை பொறுத்தவரை பேரறிஞர் அண்ணாவின் இரட்டை மொழிக் கொள்கை ஆதாரமாக உள்ளது. எனவே ஆங்கிலம் இணைப்பு மொழி, தமிழ் தாய்மொழி என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதில் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சென்னை மாவட்ட மூத்த அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ‘தமிழகத்தை பொறுத்தவரை அண்ணாவின் இரட்டை மொழிக் கொள்கை ஆதாரமாக உள்ளது. எனவே ஆங்கிலம் இணைப்பு மொழி, தமிழ் தாய்மொழி என்று தெரிவித்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘தைத்திருநாளை தமிழ்ப் புத்தாண்டாக திமுக அரசு கொண்டாடிய போது உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்ப் புத்தாண்டை சித்திரையில் கொண்டாடி பெருமை சேர்த்தது அதிமுக. திமுகவினர் தமிழ், தமிழ் என முழங்குவார்களேத் தவிர அதற்காக ஒன்றும் செய்ய மாட்டார்கள். தமிழை போற்றும் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய இந்நாளில் உறுதியேற்போம்.
    பெயரளவுக்கு சமத்துவம் என்று சொல்லிவிட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு திமுகவில் இடம் கிடைக்காது.

    சமத்துவம் என்பதை வாய்ச்சொல்லில் காட்டாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் என்றும், சமத்துவத்திற்கு அதிமுக ஆட்சியை போல திமுக ஆட்சியிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.
    Published by:Arun
    First published:

    Tags: O Panneerselvam

    அடுத்த செய்தி