Home /News /tamil-nadu /

அனைவரும் அமைதி காக்கவேண்டும் - பரபரப்பான சூழலில் தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் அறிவுரை

அனைவரும் அமைதி காக்கவேண்டும் - பரபரப்பான சூழலில் தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் அறிவுரை

ஓ.பன்னீர் செல்வம்

ஓ.பன்னீர் செல்வம்

அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நேற்றைய தினம் அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பெரும்பாலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியில் மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்கிற கோரிக்கையை கட்சித் தலைமையிடம் முன்வைத்துள்ளனர். இதனால் மீண்டும் ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் சர்ச்சையாக எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஓட்டப்பட்டன. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அருகேயும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    சமீப காலமாக அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என ஒரு கருத்து எழுந்துள்ள நிலையில் அது கட்சிக்குள்ளும்எழுந்த ஒரு காரணத்தினால் இந்த ஒற்றைத் தலைமை என்கிற கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானத்தை கொண்டு வரவும் பெரும்பாலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    நேற்று ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்தநிலையில் இன்று ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமி அவர்களது இல்லத்தில் தனித்தனியாக அவர்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் தனியாக நடைபெற்ற ஆலோசனையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், கோவை சத்யன் ஆகியோர் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதேபோல, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்தனர்.

    அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் தொடக்கம் முதலே ஓ.பன்னீர் செல்வத்தை விட எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியே இருந்துவருகிறது. கட்சியில் கொங்குமண்டலம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பரவலாக உள்ள அ.தி.மு.க நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராகவே இருந்துவருகின்றனர். எனவே, ஒற்றைத் தலைமை என்பது எடப்பாடி பழனிசாமியாகத்தான் இருக்கும் என்று செய்திகள் வெளிவருகின்றன.


    அதனால், அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இன்று சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர் செல்வம் வரவேண்டும் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.

    இந்தநிலையில், ’அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரும்ம் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: ADMK, Edappadi Palaniswami, O Panneerselvam

    அடுத்த செய்தி