ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எனக்கு ஓட்டு போடவே இல்லை... இருந்தாலும் கடமையை செய்கிறேன்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

எனக்கு ஓட்டு போடவே இல்லை... இருந்தாலும் கடமையை செய்கிறேன்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

துரை முருகன்

துரை முருகன்

மக்களுக்காக இவ்வளவு செய்தும் நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. இருந்தாலும் நான் உங்களுக்கு என் கடமைகளை செய்து வருகிறேன்- துரைமுருகன்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Vellore, India

  ஓ. பன்னீர்செல்வம் கலங்கி போய் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என அமைச்சர் துரை முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே ரூபாய் 40 கோடியில் கட்டப்பட  உள்ள  உயர்மட்ட மேம்பாலத்திற்கு  இன்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார். இதில் கைத்தறி நூல் துறை அமைச்சர் காந்தி , அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

  பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘பொன்னை ஆற்றின் குறுக்கே ஏற்கனவே கட்டப்பட்டிருந்த தரை பாலம் சேதம் அடைந்ததால் புதியதாக 40 கோடி ரூபாயில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது.

  தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.  மு.க.ஸ்டாலின் உடைய ஆட்சி மக்களோடு மக்களாக இருந்து தொண்டு செய்யும் ஆட்சி. அதன்படி நாங்கள் செய்து வருகிறோம்.

  PFI தடை எதிரொலி : பதற்றத்தை தனிக்க சென்னை முழுவதும் 4 ஆயிரம் போலீசார் குவிப்பு!..

  விரைவில் காட்பாடி ரயில் மேம்பாலம் புதியதாக ஒன்று கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்காக இவ்வளவு செய்தும் நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. இருந்தாலும் நான் உங்களுக்கு என் கடமைகளை செய்து வருகிறேன்.

  கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்காக சில்லரை மாற்றிக் கொண்டுள்ளோம் விரைவில்  திட்டத்தினை துவங்கி வழங்குவோம் என்றார்.

  அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பன்றி காய்ச்சல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘ஆந்திர அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டாமல் இருப்பதற்காக தமிழக அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது . ஆந்திரா அரசு அணை கட்ட முடியாது.  அப்படி அணைகட்ட முயற்சித்தால் வழக்கை துரிதப்படுத்துவோம் என்று கூறினார்.

  அணைக்கட்டும் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசுவதாக பன்னீர்செல்வம் கூறியதாக எழுப்பிய கேள்விக்கு,

  பன்னீர்செல்வம் கலங்கி போய் உள்ளார் அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்றார்.

  தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் கடந்த 10 ஆண்டுகளாக மதகுகளை சரி செய்யாததால் அவை உடைந்து தண்ணீர்  வெளியேறுகிறது. அதனை சரி செய்யும் பணி

  நடைபெற்று வருகிறது என்று கூறிய துரைமுருகன், திமுக அரசு என்றுமே பயங்கரவாதத்திற்கு துணை போவதில்லை என்றார்

  பி எஃப் ஐ இயக்கத்திற்கு தடை விதித்திருப்பது குறித்த கேள்விக்கு பின்னர் பார்க்கலாம் என பதிலளித்தார் துரைமுருகன்.

  செய்தியாளர்  - செல்வம், வேலூர்

  Published by:Musthak
  First published:

  Tags: Durai murugan, O Panneerselvam