Home /News /tamil-nadu /

சசிகலாவை அ.தி.மு.கவில் இணைத்துக் கொள்வீர்களா? செய்தியாளர் கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் பதில்

சசிகலாவை அ.தி.மு.கவில் இணைத்துக் கொள்வீர்களா? செய்தியாளர் கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் பதில்

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

சசிகலாவை அ.தி.மு.கவில் இணைப்பது குறித்த கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்துள்ளார்.

    சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அங்கே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் எந்த ஒரு திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்றாலும் தமிழ்நாட்டினுடைய அனுமதி பெற்று தான் செயல்படுத்த முடியும்.

    புதிய அணை கட்ட அவர்கள் இஷ்டம் போல் செயல்பட முடியாது என்றார். தொடர்ந்து பேசிய அவர் நாளை உலக மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளதால் அ.தி.மு.க தலைமை கழக மகளிரணிச் செயலாளர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் இந்தியாவில் தமிழகத்தில் பெண்களை தாயாக மதிக்கின்ற தமிழ்த் திருநாடு சர்வதேச தினத்தன்று உலகத்தின் அத்தனை மகளிர்க்கும்., தாய்மார்களுக்கும்., சகோதரிகளுக்கும்., என் இதயபூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

    சசிகலாவை இணைத்துக் கொள்ள நெருக்கடி... பரபரப்பில் அதிமுக அரசியல்

    தொடர்ந்து சசிகலாவை அ.தி.மு.கவில் இணைத்துக் கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பியவுடன் "ஐயோ சாமி.? வாங்க சாமி.?" என்று கூறிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: ADMK, O Panneerselvam, Sasikala

    அடுத்த செய்தி