ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஸ்டாலினை சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்..! - இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் விடுத்த சவால்

ஸ்டாலினை சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்..! - இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் விடுத்த சவால்

ஓபிஎஸ் - இபிஎஸ்

ஓபிஎஸ் - இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி நடத்திய போராட்டம் எனக்கு எதிரானதாக கருதவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai [Madras] | Chennai

நான் முதலமைச்சரை சந்தித்ததை நிரூபிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயாரா என ஒ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்ல வந்த முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை குறித்து என்னை பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்றும், எடப்பாடி பழனிசாமி நடத்திய போராட்டம் எனக்கு எதிரானதாக கருதவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், முதலமைச்சருடன் 1 மணி நேரம் பேசியதாக என்னுடன் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிசாமிக்கு சவால் விட்டு உள்ளனர். முதலமைச்சரை நான் சந்தித்ததை பழனிசாமி நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார். நிரூபிக்க வில்லை என்றால் பழனிசாமி விலக தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

First published:

Tags: Chennai Airport, Cm edapadi palanisami, O Pannerselvam, OPS, OPS - EPS