Home /News /tamil-nadu /

முந்திரி பழத்திலிருந்து ஊட்டச்சத்து பானம்: வேல்முருகன் கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

முந்திரி பழத்திலிருந்து ஊட்டச்சத்து பானம்: வேல்முருகன் கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

முந்திரி ஊட்டச்சத்து பானம்

முந்திரி ஊட்டச்சத்து பானம்

முந்திரி பழத்தில் இருந்து உற்சாக பானம் தயாரிக்கவில்லை என்றாலும் ஊட்டச்சத்து பானமாவது தயாரிக்கப்படுமா என்றும் அதற்கான தொழிற்சாலை அமைக்கப்படுமா என்றும் வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.

முந்திரி பழத்திலிருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுமா  என சட்டப்பேரவையில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் எழுப்பிய கேள்விக்கு, இது தொடர்பாக ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.

 

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய வேல்முருகன், கடலூர், கன்னியாகுமரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் முந்திரி அதிகமாக விளைகிறது. முந்திரி பருப்பை பயன்படுத்துகிறோம், ஆனால் லட்சக்கணக்கான முந்திரி வீணாகிறது.

அதை கடந்த காலம் கலைஞர் ஆட்சியில் முந்திரி பழங்களை கொண்டு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கேட்டேன், அதற்கு ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு கோவா அனுப்பினார்கள். அங்கு ஒயின், சாராயம் தயாரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க:  ஆளுநர் கூட்டியுள்ள மாநாட்டில்  துணை வேந்தர்கள்  மொபைல் போன் கொண்டு செல்ல தடை..!


நம்முடைய பகுதியில் ஒயின், சாராயம் தயாரிக்கப்படாவிட்டாலும், தென் ஆப்ரிக்காவில் ஊட்டச்சத்து பானம் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் ஏற்றுமதி ஆகிறது. முந்திரி பழத்தில் இருந்து உற்சாக பானம் தயாரிக்கவில்லை என்றாலும் ஊட்டச்சத்து பானமாவது தயாரிக்கப்படுமா என்றும் அதற்கான தொழிற்சாலை அமைக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிங்க: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி இன்று ஆஜர்


அப்போது சபாநாயகர் அப்பாவு, மூல கேள்விக்கு சம்மந்தம் இல்லாவிட்டாலும் அமைச்சர் பதில் சொல்லுங்கள் என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , உற்சாக பானம் இல்லையென்றாலும், ஊட்டச்சத்து பானமாவது தயாரிக்க வேண்டுமென உறுப்பினர் கூறுகிறார். இதை வணிக ரீதியாகவும், தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும். கடந்த திமுக ஆட்சியின் போதே இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது, அதன் முடிவுகளையும் குறித்தும் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்..
Published by:Murugesh M
First published:

Tags: Minister, TN Assembly

அடுத்த செய்தி