• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எகிப்து வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் இதயத்துக்கு நல்லது...! ஊட்டச்சத்து நிபுணர்கள்

எகிப்து வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் இதயத்துக்கு நல்லது...! ஊட்டச்சத்து நிபுணர்கள்

  • News18
  • Last Updated :
  • Share this:
எகிப்து வெங்காயத்தை விட, பெரம்பலூர் வெங்காயமே உசத்தி தான். குறிப்பாக சின்ன வெங்காயம் இதயத்துக்கு மிகவும் நல்லது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் வெங்காய விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. தங்கம், வெள்ளி விலைக்கு நிகராக வெங்காயத்தின் விலையும் தினசரி பட்டியலிடப்படுகிறது.

நாடாளுமன்ற மன்றம் தொடங்கி, சட்டமன்ற வரை வெங்காய விலையை குறைக்க விவாதங்களும், ஆலோசனைகளும் நடக்கிறது.

நடுத்தர, ஏழை மக்களின் வாழ்வில் வெங்காய விலை உயர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கும் முன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் சமையலில் வெங்காயத்தை பயன்படுத்துவதில்லை என்று பேசியது சர்ச்சையை கிளப்பியது.

வெங்காய தட்டுபாட்டை குறைக்க எகிப்தில் இருந்து வெங்காய இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், எகிப்த் வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற தகவல் பரவியதை அடுத்து, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ”எகிப்து வெங்காயம் குறித்து மக்கள் மத்தியில் தவறாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

எகிப்து வெங்காயத்தில் சல்பர் இருப்பதால் காரத்தன்மை மிக்கதாக இருக்கும். இது இதய நோய் கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் எகிப்து வெங்காயம் குறித்து தவறான செய்தி பரவுவதைக் கேட்டு நேற்று எகிப்து வெங்காயத்தை முதல்வர் சாப்பிட்டு பார்த்து பரிசோதித்துள்ளார்” என தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களை வைரலாக பரவியது. எனவே, எகிப்து வெங்காயத்தும், இந்திய வெங்காயத்துக்கும் என்ன வித்யாசம்? மருத்துவ குணங்களில் வேறுபாடு உள்ளதா என பல்வேறு தரப்பினரிடம் கேட்டோம்.

நம்ம ஊர் வெங்காயத்துக்கும், எகிப்த் வெங்காயத்துக்கும் என்ன வித்யசத்தை உணர்கிறீர்கள் என கோயம்பேட்டிற்கு வெங்காயம் வந்த பெண்களிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர்கள், “எகிப்து வெங்காயம் டார்க் ரெட் கலராக இருக்கிறது. பெரியதாக இருப்பதால் கிலோவுக்கு மூன்று அல்லது நான்கு வெங்காயம் தான் வருகிறது.

அதன் தோள் மொத்தமாக இருப்பதோடு, காரமாகவும், சுவை குறைவாகவும் இருக்கிறது. வழக்கத்தை விட வித்யாசமாக இருப்பதால் எகிப்த் வெங்காயத்தை பயன்படுத்த தயக்கமாக இருக்கிறது. நம்மூர் வெங்காயத்தை தான் வாங்குகிறோம்” என்றனர்.

அதேபோல் கோயம்பேடு வியாபாரிகளிடம் பேசிய போது, “எகிப்து வெங்காயம் 30 டன் கோயம்பேட்டிற்கு வந்தது. ஆனால், மூன்றில் ஒரு பங்கு கூட விற்பனை ஆகவில்லை. விவசாய முறை, மண்ணின் தன்மைக்கு ஏற்ப விளைபொருட்கள் மாறுபடும். தமிழகத்திற்கு இது புதிது என்பதால், மக்கள் எகிப்த் வெங்காயத்தை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை,” என்றனர்.

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர்களிடம் கருத்து கேட்டோம். அப்போது அவர்கள் கூறுகையில்,“வெங்காயத்தில் நார்சத்து அதிகம் உள்ளது. எனவே, இது ஜீரணத்துக்கும், உடலுக்கு மிகவும் நல்லது.

வெங்காயத்தை சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டால் வைட்டமின் சி கிடைக்கிறது. அதேபோல், வெங்காயத்தில் சல்பர் இருப்பதால், இதயத்திற்கும் நல்லது. எகிப்த் வெங்காயம் தான் சிறந்து என்றில்லை.

நம் பெரம்பலூர் வெங்காயமே உசத்தி தான். பல்லாரியை விட, சின்ன வெங்காயம் நல்லது. எனவே, விலை அதிகரித்தாலும், உணவில் வெங்காயத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்” என்கின்றனர்.

Also see...


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: