அழுகிய நிலையில் வரும் சத்துணவு முட்டைகள் - ஊழியர்கள் குற்றச்சாட்டு

Youtube Video

மாணவர்களுக்கு 10 முட்டைகள் வழங்கப்பட வேண்டிய இடத்தில் 7 முட்டைகள் மட்டுமே வழங்கி வருவதாக சத்துணவு ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர்.

 • Share this:
  பள்ளி சிறுவர்களுக்கு வழங்கும் சத்துணவு முட்டைகள், அழுகிய நிலையில் வருவதாக காரைக்குடி சத்துணவு மைய ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, மாதத்திற்கு 10 முட்டைகளுடன் சத்துணவு வழங்கப்படுகிறது. தற்போதுள்ள கொரோனா சூழலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் அல்லது பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து சத்துணவு வழங்கப்படுகிறது.

  இந்நிலையில் காரைக்குடி அருகே பெரியகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதத்திற்குரிய சத்துணவு முட்டைகளை ஒப்பந்ததாரர்கள் விநியோகிக்கவில்லை என்று புகார் எழுந்தது.

  இதனைதொடர்ந்து சனிக்கிழமை அன்று முட்டைகள் பள்ளிக்கு அனுப்பப்பட்டன. ஆனால் அவற்றில் பெரும்பாலான முட்டைகள், அழுகியும்,உடைந்த நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு 10 முட்டைகள் வழங்கப்பட வேண்டிய இடத்தில் 7 முட்டைகள் மட்டுமே வழங்கி வருவதாக சத்துணவு ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

   
  Published by:Sankaravadivoo G
  First published: