ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

செவிலியர்கள் போராட்டம்

செவிலியர்கள் போராட்டம்

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தற்காலிக பணியில் நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக வளாகத்தில் நூற்றுக் கணக்கான செவிலியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொரோனா பணிக்காக மருத்துவ பணிநியமன ஆணையம் மூலமாக மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் செவிலியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். மூன்று கட்டடங்களாக செவிலியர்கள் தற்காலிகமாக பணியில் சேர்க்கப்பட்டனர்.

முதல் மற்றும் மூன்றாம் கட்டத்தில் தற்காலிக பணி நியமன ஆணையை பெற்ற 2,750 செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாம் கட்டமாக பணிநியமனம் செய்யப்பட்ட 3,485 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Must Read : 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் கூறுகையில், கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின்போது உயிரை பணயம் வைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவ சேவையாற்றிய தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றனர்.

Published by:Suresh V
First published:

Tags: Fasting Protest, Nurses