• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'விரைவில் நல்ல செய்தி’- ஸ்டாலின் பதிலால் செவிலியர்கள் மகிழ்ச்சி!

'விரைவில் நல்ல செய்தி’- ஸ்டாலின் பதிலால் செவிலியர்கள் மகிழ்ச்சி!

ஸ்டாலினுடன்  செவிலியர்கள் சந்திப்பு

ஸ்டாலினுடன் செவிலியர்கள் சந்திப்பு

பணியில் அமர்த்தப்பட்ட மூன்று மாதத்திற்குள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்களை பணி நீக்கம் செய்துவிட்டு வேறொரு செவிலியர்களுக்கு புதிதாக தற்காலிக பணிகள் வழங்கப்பட்டுள்ளது.

  • Share this:
சென்னையில்  தன்னை சந்தித்த பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களிடம்  விரைவில் நல்ல செய்தி வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததால்  செவிலியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கொரோனோ காலத்தில் அதிக செவிலியர்கள் தேவைப்பட்ட காரணத்தால் தமிழக அரசு 6000 செவிலியர்களை உடனடியாக  தற்காலிக பணிக்கு நியமனம் செய்தது.  அவர்களும் தங்கள்  உயிரைக்கூட பொருட்படுத்தால் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாக பணியாற்றினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் பணியில் அமர்த்தப்பட்ட மூன்று மாதத்திற்குள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பணி நீக்கம் செய்துவிட்டு வேறொரு செவிலியர்களுக்கு புதிதாக தற்காலிக பணிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் தங்களுக்கு அந்தப் பணிகளை மீண்டும் வழங்க வேண்டும் என தொடர்ந்து பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். துறை சார்ந்த அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் தற்போதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: திமுக ஆட்சியில் மகிழ்ச்சியை விட சிரிப்புதான் வருகிறது: டிடிவி தினகரன்!


இந்த விவகாரத்தை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் நேரடியாக புகார்களை அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.

இந்த தகவலை அறிந்த தமிழக முதலமைச்சர்  செவிலியர்களை சந்திக்க நேரம் ஒதுக்கினார். டிஎம்எஸ் வளாகம் அருகே இருக்கக்கூடிய அண்ணா அறிவாலயத்தில் அவர்களை அழைத்து உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் "விரைவில் நல்ல செய்தி வரும்" எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்படும் மணல் - சினிமாவை மிஞ்சும் பின்னணி!


இதனால் மகிழ்ச்சி அடைந்த செவிலியர்கள் போராட்டம் தொடங்கும் முன்னதாகவே போராட்டத்தை கைவிட்டு விட்டு தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: