• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு பிரசவம் - டி.என்.ஏ சோதனை மூலம் சிக்கிய பணியாளர்

14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு பிரசவம் - டி.என்.ஏ சோதனை மூலம் சிக்கிய பணியாளர்

கர்ப்பக் காலத்தில் மனநிலை மாற்றங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். அதனை சரிசெய்ய உதவிகள் தேவைப்பட்டால் யோசிக்காமல் கணவரிடமோ, குடும்பத்தினரிடமோ கேட்பதில் தவறில்லை.

கர்ப்பக் காலத்தில் மனநிலை மாற்றங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். அதனை சரிசெய்ய உதவிகள் தேவைப்பட்டால் யோசிக்காமல் கணவரிடமோ, குடும்பத்தினரிடமோ கேட்பதில் தவறில்லை.

கோமாவில் இருக்கும் பெண்ணை யாரேனும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த போலீசார், மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து ஆண்களையும் டி.என்.ஏ சோதனைக்கு உள்படுத்தினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
14 ஆண்டுகளாக மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் பெண் கர்ப்பமான விவகாரத்தில், மருத்துவமனையைச் சேர்ந்த பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 29 வயதான பெண் சுயநினைவின்றி கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண் கர்ப்பம் தரித்தார். கடந்த மாதம் அவருக்கு குழந்தையும் பிறந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த மருத்துமனை நிர்வாகம் போலீசில் புகாரளித்தது.

கோமாவில் இருக்கும் பெண்ணை யாரேனும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த போலீசார், மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து ஆண்களையும் டி.என்.ஏ சோதனைக்கு உள்படுத்தினர். இந்த சோதனையில், மருத்துவ பணியாளராக இருக்கும் நாதன் சுதர்லாந்த் என்பவர் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது சோதனையில் தெரியவந்தது.

இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனை நிர்வாகம் நிதியுதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அங்கு எழுந்துள்ளது.

Also See...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: