Home /News /tamil-nadu /

சுவாதி கொலை வழக்கில் ரூ.3 கோடி இழப்பீடு கேட்டு பெற்றோர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சுவாதி கொலை வழக்கில் ரூ.3 கோடி இழப்பீடு கேட்டு பெற்றோர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

ரயில்வே நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு படையின் அலட்சியம் காரண சுவாதி கொலை செய்யப்பட்டார் என்பதால் ரயில்வே நிர்வாகம் தரப்பில் இழப்பீடாக 3 கோடி ரூபாய் வழங்க வேண்டும் – சுவாதி பெற்றோர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
3 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கடந்த 2016 ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சுவாதி இறப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி சுவாதியின் தாய் ரங்கநாயகி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடலூரை உலுக்கிய மாணவி திலகவதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை…

அதில், ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையின் அலட்சியம் காரணமாகவே சுவாதி கொலை செய்யப்பட்டார் என்பதால் ரயில்வே நிர்வாகம் தரப்பில் இழப்பீடாக 3 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என  கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது ரயில்வே துறை தரப்பில்,  பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கி வருகிறது என்றும், சுவாதி கொலை என்பது  திட்டமிட்ட சம்பவம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இழப்பீடு கோரி சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று அறிவுறுத்திய நீதிபதி, இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Published by:Musthak
First published:

Tags: Chennai High court, Madras High court

அடுத்த செய்தி