ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் பாதியிலேயே நின்ற லிப்ட்- 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 11 பயணிகள் மீட்பு

நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் பாதியிலேயே நின்ற லிப்ட்- 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 11 பயணிகள் மீட்பு

நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் பாதியிலேயே நின்ற லிப்ட்- 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 11 பயணிகள் மீட்பு

நுங்கம்பாக்கம் ரயில் நிலைய லிப்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறால் பாதியிலேயே நின்றதால் இரண்டு மணி நேரமாக போராட்டத்திற்குப் பிறகு பயணிகள் மீட்கப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் இரவு 7:45 மணி அளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து வந்த பயணிகள் மின் தூக்கியை பயன்படுத்தினர். 5 பெண்கள், ஒரு ஒன்றரை வயது கை குழந்தை உட்பட 11 பேர் பயணித்த அந்த மின் தூக்கி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நின்றது. மின்தூக்கியில் சிக்கி இருந்தவர்கள் அதில் ஒட்டப்பட்ட அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு தாங்கள் மின்தூக்கியில் சிக்கியிருக்கும் விபரத்தை ரயில்வே காவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக விரைந்து வந்த ரயில்வே காவல் துறையினர் லிப்ட் இரண்டு தளங்களுக்கு இடையில் பாதியிலேயே சிக்கி இருப்பதை கண்டனர். அரை மணி நேரத்தில் மின்தூக்கி பொறியாளர் வரவழைக்கப்பட்டு லிப்டை இயக்கும் பணிகள் நடைபெற்றன.

லிட்டில் சிக்கி இருப்பவர்களின் உதவியோடு மின்தூக்கியில் மேற்பரப்பில் இருக்கும் மின் விசிறியை கழற்றி அந்த துவாரத்தின் வழியே சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். லிப்டு இடையில் சிக்கியதால் மேல் தரப்பிலிருந்தும் தரைத்தளத்தில் இருந்து மீட்கும் பணிகளுக்காக வீரர்கள் தொடர்ந்து முயற்சி செய்தனர். மின்தூக்கியின் மேல் இருந்த துவாரம் திறக்கப்பட்டதும் சிக்கி இருந்தவர்களை வீரர்கள் கயிறு மூலம் மீட்டனர். முதலில் பெண் குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ச்சியாக அனைவரையும் மீட்டனர்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் நிலையில் அங்கு மின்தூக்கி பராமரிப்பதற்கு ஊழியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என பயணிகள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு வருகிறது.

காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் - காரியக் கமிட்டி கூட்டத்தில் முடிவு

சென்னை மாநகரின் முக்கிய ரயில் நிலையமான நுங்கம்பாக்கத்தில் மின்தூக்கி செயல்படாமல் இரண்டு மணி நேரமாக பயணிகள் சிக்கிக்கொண்டதால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Chennai