ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எத்தனை எம்எல்ஏக்கள் என்கிற எண்ணிக்கை முக்கியமல்ல, எண்ணமே முக்கியம்: நயினார் நாகேந்திரன்

எத்தனை எம்எல்ஏக்கள் என்கிற எண்ணிக்கை முக்கியமல்ல, எண்ணமே முக்கியம்: நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

திமுக ஆளும் கட்சி என்பதால் சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி அதன் கருத்துக்களை முன்வைக்க தயங்காது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  எத்தனை எம்எல்ஏக்கள் என்கிற எண்ணிக்கை முக்கியமல்ல, எண்ணமே முக்கியம் என பாஜக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

  நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்த பாஜகவிற்கு 20 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. அதில் பாஜக நான்கு இடங்களை கைப்பற்றியது. அதன்படி, நெல்லையில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர் காந்தி, கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் டாக்டர் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

  இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டியின் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  இந்த கூட்டம் முடிந்த பின் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், திமுக ஆளும் கட்சி என்பதால் சட்டமன்றத்தில் பாஜக அதன் கருத்துக்களை முன்வைக்க தயங்காது. தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்திடும் வகையில் தமிழக பாஜகவின் செயல்பாடு சட்டமன்றத்தில் இருக்கும். எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் என்கிற எண்ணிக்கை முக்கியமல்ல எங்களின் எண்ணமே முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

  தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தமிழக மாநிலத்தலைவர் எல்.முருகன் கூறியதாவது, 'தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. சட்டமன்றத்தை தாங்கிப் பிடிக்கும் 4 தூண்களாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள். தமிழகத்தில் பாஜக காலுன்ற முடியாது என்றார்கள்; தற்போது தாமரை மலர்ந்துள்ளது. ஆளுங்கட்சிக்கு ஆலோசனை வழங்க தயாராக இருக்கும் நாங்கள், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்க மாட்டோம்.' இவ்வாறு அவர் கூறினார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Esakki Raja
  First published:

  Tags: BJP, Nainar Nagendran, TN Assembly