கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் - உள்துறை அமைச்சகம்

கூடங்குளம் அணு உலை (கோப்புப் படம்)

"திமுக எம்.பி வில்சன் கேள்விக்கு மாநிலங்களவையில் உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்துள்ளது”

  • Share this:
    கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டக்காரர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    கூடங்குளத்தில் அணுமின் நிலையத்திற்கு எதிராக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் உச்சநீதிமன்றம் அணுமின் நிலையத்தின் செயல்பாட்டுக்கு 15 வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. அதில், அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    6 ஆண்டுகள் கடந்த பிறகும் வழக்குகள் வாஸ் பெறப்படாமல் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், திமுக எம்.பி. வில்சன் கேள்விக்கு உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது.



    இதை தனது டிவிட்டர் பக்கத்தில் வில்சன் வெளியிட்டுள்ளார். அதில், உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படி 213 கிரிமினல் வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் பதிலளித்திருப்பதாக வில்சன் கூறியுள்ளார்.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

     
    Published by:Vaijayanthi S
    First published: