ஓபிசி இட ஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி - சீமான் பெருமிதம்

ஓபிசி இட ஒதுக்கீடு தீர்ப்பு குறித்து கருத்துரைத்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இது தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி எனக் கூறியுள்ளார்.

ஓபிசி இட ஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி - சீமான் பெருமிதம்
சீமான்.
  • Share this:
மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த தீர்ப்பு குறித்து கருத்துரைத்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இது தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி எனக் கூறியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், ”அகில இந்திய மருத்துவத் தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு சட்டமியற்ற வலியுறுத்தியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புச் செய்தி கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

Also read: ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு பாஜகவுக்கு கிடைத்த வெற்றி - செய்தித் தொடர்பாளர் நாராயணன்


இத்தீர்ப்பு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக ஒருமித்து ஓங்கி ஒலித்திட்ட‌ தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

சமூக நீதியை நிலைநாட்ட உழைத்திட்ட, அதற்காகக் குரல்கொடுத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading