ராஜிவ் காந்தி நினைவிடத்தில் நாம் தமிழர் நிர்வாகி சர்ச்சை டிக்டாக்...! காங்கிரசார் நூதன போராட்டம்

ராஜிவ் காந்தி நினைவிடத்தில் நாம் தமிழர் நிர்வாகி சர்ச்சை டிக்டாக்...! காங்கிரசார் நூதன போராட்டம்
  • News18
  • Last Updated: March 2, 2020, 5:14 PM IST
  • Share this:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவகத்தில் சர்ச்சைக்குறிய வகையில் டிக் டாக் வீடியோ எடுத்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று பொதுக்கூட்ட மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இந்த நிலையில், சீமான் பேசும் அதே ஆடியோவை வைத்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி சாட்டை துரைமுருகன் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் வைத்து டிக் டாக் செய்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் உடனடியாக துரைமுருகனை தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.மேலும், துரை முருகன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
First published: March 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading