ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மறைமுக கூட்டணி வைத்து பாஜகவின் கொள்கையை திமுக நிறைவேற்றுகிறது - சீமான் விமர்சனம்

மறைமுக கூட்டணி வைத்து பாஜகவின் கொள்கையை திமுக நிறைவேற்றுகிறது - சீமான் விமர்சனம்

சீமான்

சீமான்

திராவிட கட்சிகள் தமிழ் தமிழ் என கூறி ஆட்சியைப் பிடித்தது மட்டும்தான் இங்கு நடைபெற்றதாகவும் தமிழுக்கு அவர்கள் பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை குறிப்பாக கடைகளின் பெயர் பலகைகள் கூட தற்போது தமிழில் இல்லை என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி வைத்து அவர்களது கொள்கையை நிறைவேற்றி வருவதாக நாம் தமிழர் கடிச்யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

  சென்னை தி.நகரில் உள்ள முத்து ரங்கன் சாலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. என தெரிவித்தது பற்றி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, அவர்கள் நட்டதே ஒரு செங்கல் தான் அதையும் தம்பி உதயநிதி பிடுங்கி எடுத்து வந்து விட்டார் என்றும், இவ்வாறு தான் பாஜகாவினர் நம்மை ஏமாற்றி வருவதாக தெரிவித்தார்.

  தமிழிசை காலத்திலிருந்து பாரதிய ஜனதா தாமரை தமிழகத்தில் மலர்ந்தே தீரும் என கூறி வருகின்றனர் அது ஒருபோதும் நடக்காது. திராவிட கட்சிகள் தமிழ் தமிழ் என கூறி ஆட்சியைப் பிடித்தது மட்டும் தான் இங்கு நடைபெற்றதாகவும் தமிழுக்கு அவர்கள் பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை குறிப்பாக கடைகளின் பெயர் பலகைகள் கூட  தற்போது தமிழில் இல்லை என தெரிவித்தார்.

  Also Read: நடிகை தற்கொலையில் வழக்கில் அதிரடி திருப்பம் : சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!

  மேலும் ,ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு தமிழகத்தில் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது பற்றி பேசியவர் திமுக ஆளும் அரசு அது சரியான எதிர் வாதத்தை முன்வைக்கவில்லை. அந்த காரணத்தினால் தான் தற்போது பேரணிக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதிமுக காலத்தில் கூட கூட்டணியின் அடிப்படையில் அவர்கள் பாஜகவுடன் இணைந்திருந்தனர். ஆனால், திமுக மறைமுகமாக அவர்களுடன் இணைப்பிலிருந்து அவர்களின் கொள்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகின்றனர் என தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதனுடன், தாம்பரம் திமுக எம்.எல்.ஏ தனியார் நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்தது குறித்து பேசியவர் ஒரு எம்.எல்.ஏ மட்டும் தான் தற்போது நமக்கு தெரியவந்துள்ளார் பல கவுன்சிலர்களின் கணவர்கள் செய்யும் அராஜகங்கள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது என தெரிவித்தார். அதன் பின்னர், தமிழகத்தின் மருத்துவ பொருட்களின் தட்டுப்பாடு மிகவும் அதிகரித்திருப்பதாகவும் அதற்கு முறையான நடவடிக்கை எடுத்து ஒரு தீர்வு கொண்டு வர வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியனை இந்த செய்தியாளர் சந்திப்பின் வாயிலாக வேண்டி கொள்வதாக தெரிவித்தார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: BJP, Chennai, DMK, Naam Tamilar katchi, RSS