மக்களின் கேள்விகளுக்கு பயந்து வேறு தொகுதிக்கு செல்பவர்கள் எல்லாம் எனக்கு சவால் அல்ல: டிராக்டரில் வாக்கு கேட்கும் மதுரை அன்பரசி!

மக்களின் கேள்விகளுக்கு பயந்து வேறு தொகுதிக்கு செல்பவர்கள் எல்லாம் எனக்கு சவால் அல்ல: டிராக்டரில் வாக்கு கேட்கும் மதுரை அன்பரசி!

அன்பரசி

மதுரை வடக்கு சட்டன்ற தொகுதியில் திமுக சார்பில் கோ.தளபதி, அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் டாக்டர் சரவணன் ஆகியோர் களம் கணகின்றனர். இவர்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய அன்பரசி போட்டியிடுகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மக்களின் கேள்விகளுக்கு பயந்து வேறு தொகுதிக்கு செல்பவர்கள் எல்லாம் எனக்கு சவால் அல்ல என்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக மதுரை வடக்கு சட்டன்ற தொகுதியில் போட்டியிடும் அன்பரசி தெரிவித்துள்ளார்.

மதுரை வடக்கு சட்டன்ற தொகுதியில் திமுக சார்பில் கோ.தளபதி, அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் டாக்டர் சரவணன் ஆகியோர் களம் கணகின்றனர். இவர்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய அன்பரசி போட்டியிடுகிறார்.

திறந்தவெளி வேன், ஜீப், குட்டி யானை உள்ளிட்ட வாகனங்களில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க செல்கிறார்கள். இன்னும் சில வேட்பாளர்கள் மாட்டு வண்டிகளில் கூட செல்கிறார்கள். ஆனால், இந்த அன்பரசி அவரே டிராக்டர் ஓட்டியபடி மதுரை  அண்ணாநகர் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பேசிய நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தியாளர் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

முதல் முறையாக தேர்தல் களம் காண்கிறீர்கள்... மக்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது?

18 முதல் 30 வயதுள்ள நபர்களே நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கள நிலவரம் உண்மையில் வேறாக உள்ளது.40, 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களிடம் கூட நாம் தமிழர் கட்சி சென்று சேர்ந்துள்ளது. அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சியை பற்றி, அதன் செயல்பாடுகள் பற்றி மிகுந்த நம்பிக்கை உள்ளது. மாற்றம் வேண்டும் என்பதில் அனைத்து தரப்பு மக்களும் உறுதியாக உள்ளனர். எனவே, அவர்களுடைய மாற்றாக நாம் தமிழர் கட்சி மட்டுமே இருக்கும்.

டிராக்டரில் ஏன் பிரச்சாரம் செய்கிறீர்கள்?

எங்களுடைய சின்னம் விவசாயி. மேலும், நாம் தமிழர் கட்சி அளவிற்கு விவசாயிகள் மீதும் விவசாயத்தின் மீதும் யாரும் இவ்வளவு அக்கறை கொண்டது கிடையாது. எனவே நான் டிராக்டரில் சென்று வாக்கு சேகரிக்கிறேன்.

உங்களை எதிர்த்து களம் காணும் திமுக, பாஜக வேட்பாளர்களை எதிர்கொள்வதில் சவாலாக உணர்கிறீர்களா?

என்னை எதிர்த்து களம் காணும் திமுக, பாஜக வேட்பாளர்களை எதிர்கொள்வது எனக்கு பெரிய சவாலாக இல்லை. ஏனெனில் இருவரும் முதன் முதலாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள். ஏற்கனவே போட்டியிட்டவர்கள் கூட தற்போது வேறு தொகுதியில் தான் களம் காண்கிறார்கள். மக்கள் கேள்வி கேட்பார்கள் என பயந்து வேறு தொகுதிக்கு சென்று விட்டவர்கள் அவர்கள். எனவே, அவர்கள் யாரும் எனக்கு சவாலாக இல்லை. மேலும், திமுக, பாஜகவிற்கு வாக்களிக்க மக்களுக்கு விருப்பம் இல்லை. எனவே, அவர்களை எதிர்கொள்வது எளிமையாகவே உள்ளது.

யார் எங்களை எதிர்கொண்டாலும் எங்களுடைய உழைப்பு மாறாது. இவர்கள் எல்லோரும் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னரே மக்களை சந்திக்க வருகிறார்கள். ஆனால், எங்களை ஜனவரி மாதமே அறிமுகம் செய்து விட்டார் சீமான். எனவே மூன்று மாதங்களாக நாங்கள் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். எதிர் வேட்பாளர்களை மனதில் வைத்து நாங்கள் உழைப்பதில்லை. நாங்கள் மக்களை மனதில் வைத்தே உழைக்கிறோம். எனவே எங்களுக்கு வரவேற்பு மிக சிறப்பாக உள்ளது.

Also read... எங்கள் தொகுதியில் பிரசாரம் செய்யுங்கள் மோடி... ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் திமுக வேட்பாளர்கள்!

வெல்லும் பட்சத்தில் தொகுதிக்கு என்ன செய்வீர்கள்?

வடக்கு தொகுதியின் நிலைமை மிக மோசமாக உள்ளது. குடி தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. பாதாள சாக்கடை பிரச்சனை அதை விட பெரிதாக இருக்கிறது. பல பகுதிகள் மாநகராட்சி எல்லைக்குள் வந்த பிறகும் அங்கு பாதாள சாக்கடை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. குப்பைகளை ஒரு வாரம் ஆனால் கூட நடவடிக்கை எடுப்பதில்லை.இந்த மூன்று பிரச்சனைகளையும் போர்க்கால அடிப்படையில் தீர்ப்பதற்கு முயற்சி எடுப்போம்.மேலும், கண்மாய்களை தூர்வாரி நிரந்தரமாக நீர் தேக்குவதற்கை நடவடிக்கை எடுப்போம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: