• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நொய்யல் ஆற்றில் கலந்துள்ள உலோக கழிவுகள் - புற்றுநோய், மலட்டுத்தன்மையை உண்டாக்கும் என எச்சரிக்கை

நொய்யல் ஆற்றில் கலந்துள்ள உலோக கழிவுகள் - புற்றுநோய், மலட்டுத்தன்மையை உண்டாக்கும் என எச்சரிக்கை

Youtube Video

நொய்யல் ஆற்றில் அளவுக்கு அதிகமான கன உலோகங்கள் கலந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அது புற்றுநோய், மலட்டுத்தன்மை, நரம்பு மண்டல நோய்களை வரவழைக்கும் என கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரி மலைக்காடுகளில் உருவாகும் நொய்யல் ஆறு திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பயணித்து கரூர் மாவட்டத்தின் நொய்யல் எனும் இடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கோவையில் 78 கிலோமீட்டர் தூரம் செல்லும் நொய்யல் ஆறு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிவருகிறது. மொத்தம் 36ஆயிரத்து 304 ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதி பெற்றுவரும் நிலையில், நொய்யல் ஆறு தற்போது அழிவை நோக்கிச் செல்கிறது என்றே கூறலாம். இதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆய்வு. நொய்யல் ஆற்று நீரின் மாதிரிகள் மற்றும் ஆற்றில் வசிக்கும் நண்டுகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.

இந்திய தரத்தின்படி ஒரு லிட்டர் நீரில் 0.5 மில்லிகிராம் இருக்க வேண்டிய தாமிரம் 2.75 மில்லிகிராமும், 0.1 மில்லிகிராம் இருக்க வேண்டிய காரீயம் 10.74 மில்லிகிராமும், 250 மில்லிகிராம் இருக்க வேண்டிய குளோரைடு ஆயிரத்து 10 மில்லிகிராமும் உள்ளது.

மேலும், 45 மில்லிகிராம் இருக்க வேண்டிய நைட்ரேட் 250 மில்லிகிராமும், 0.5 மில்லிகிராம் இருக்க வேண்டிய அம்மோனியா 0.50 மில்லிகிராமும், 200 மில்லிகிராம் இருக்க வேண்டிய கடினத்தன்மை ஆயிரத்து 75 மில்லிகிராமும் இருப்பது தெரியவந்தது.

நொய்யல் ஆறு சமவெளிப்பகுதியை அடைந்த உடனேயே, குடியிருப்பு கழிவுநீர், தொழிற்சாலை, சாயப்பட்டறை மற்றும் சலவை பட்டறை கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் கலப்பதே இதற்கு காரணம் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை காளிதாஸ்..

நொய்யல் ஆற்றில் உள்ள நண்டுகளின் உடலில், ஒரு கிலோகிராமில் 30 மில்லிகிராம் இருக்க வேண்டிய துத்தநாகம் 51.72 மில்லிகிராமும், 0.5 மில்லிகிராம் இருக்க வேண்டிய தாமிரம் 0.22 மில்லிகிராமும், 0.5 மில்லிகிராம் இருக்க வேண்டிய காரீயம் 19.91 மில்லிகிராமும் இருப்பது தெரியவந்தது.



அதிகளவு கன உலோகங்கள், ரசாயனங்கள் கலந்துள்ள நொய்யல் ஆற்றை மீட்க, கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டுமென பாரதியார் பல்கலைக்கழக ஆய்வறிக்கை கூறுகிறது. கடந்த மே மாதம் 230 கோடி ரூபாய் மதிப்பில் நொய்யல் ஆற்றை விரிவாக்குதல், புனரமைத்தல், நவீனமயமாக்கல் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். ஆனால், இதில் கழிவுநீர் மேலாண்மை அம்சங்கள் இல்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: