மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு எங்கேயும் குறைக்கவில்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற வளாகத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், இன்று சட்டப்பேரவையில் பெட்ரோல் டீசல் குறித்து காங்கிரஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய முதல்வர், நிதியமைச்சர், உண்மைக்கு புறம்பான பல்வேறு விஷயங்களை பேசி உள்ளனர்.
மத்தியர அரசு கலால் வரியை உயர்த்தி உள்ளதாக சொல்கிறார்கள். பெட்ரோல் டீசலை இறக்குமதி செய்யும் பட்டியலில் தான் இந்தியா இருக்கிறது.கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் வாட் வரியை குறைத்ததால் ஒரு லட்சம் கோடி இழப்பிடு ஏற்படும் என அறிக்கை சொல்கிறது.
மத்திய பணவீக்கம் குறித்து பேசும் மாநில நிதியமைச்சர் மாநில பண வீக்கம் நிலையை கணக்கிட வேண்டும். கடந்த நவம்பர் மாதம் முதல் 2800 கோடி ரூபாய் வாட் வரியாக தமிழக அரசு பெற்றுள்ளது.பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வரும் வருவாயை மத்திய அரசு வீட்டிற்கு கொண்டு செல்லவில்லை. தடுப்பூசி உட்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது. கடந்த ஆண்டு மட்டும் 24 % வரி வருவாயை மத்திய அரசு தமிழக அரசுக்கு கொடுத்துள்ளது.மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு எங்கேயும் குறைக்கவில்லை என்று தெரிவித்தார்.
Also Read : உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு ரத்து - காரணம் என்ன?
இதற்கு முன்னதாக தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின் போது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வது குறித்து பேசினார். அப்போது பெண்கள் கையில் காசு இருந்தால் அது குடும்பத்தின் வளர்ச்சிக்கும் குழந்தைகளின் கல்விக்கும் உதவும் என்றும், அதே நேரம் ஆண்களின் கையில் இருக்கும் பணம் பீடி, சிகிரெட், டாஸ்மார்க் ஆகிய இடங்களுக்குதான் செல்லும் என்று குறிப்பிட்டு பேசினார்,
இதையடுத்து அவையில் உள்ள பெரும்பாலான திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், எல்லா ஆண்களையும் நான் குறிப்பிடவில்லை ஒரு சிலர் அவ்வாறு இருப்பதாக பேச்சை மாற்றினார், அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ஆன்லைன் விற்பனை குறித்து மட்டும் பேசுங்க மா என்றார். இதையடுத்து பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, TN Assembly, Vanathi srinivasan