ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தில் கிராமசபைக் கூட்டங்கள் : பொதுமக்களுக்கு அழைப்பு!

நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தில் கிராமசபைக் கூட்டங்கள் : பொதுமக்களுக்கு அழைப்பு!

நவம்பர் 1 ஆம் நாள் உள்ளாட்சிகள் தினம்!

நவம்பர் 1 ஆம் நாள் உள்ளாட்சிகள் தினம்!

உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் ஊரக வாழ் பொதுமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டு விவாதத்தில் பங்கு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நவம்பர் 1 ஆம் நாள் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள  கிராமசபைக் கூட்டங்களில்  ஊரக வாழ் பொதுமக்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

  தமிழக முதல்வர் 22.04.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகள் எண்.110 ன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் நாள் உள்ளாட்சிகளின் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார். அறிவிப்பிற்கிணங்க உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த வேண்டியும், உள்ளாட்சி அமைப்புகளின் சாதனைகள் மற்றும் திட்டச் செயலாக்கங்கள் குறித்து தகவல், கல்வி மற்றும் தொலை தொடர்பு இயக்கங்கள் நடத்தவும் ஏதுவாக நவம்பர் 1 ஆம் நாளினை உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாட ஆவண செய்யப்பட்டுள்ளது.

  ஒவ்வொரு ஆண்டும் இதுவரையில் வருடத்திற்கு 4 முறை கிராமசபைகள் முறையே சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), தொழிலாளர் தினம் (மே 1), குடியரசு தினம் (ஐனவரி 26) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) நடத்தப்பட்டு வந்தன. தற்போது முதல்வரின் ஆணைப்படி வருடத்திற்கு 6 முறை நடத்தப்படும். அதாவது கூடுதலாக உள்ளாட்சிகள் தினம் (நவம்பர் 1) மற்றும் உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) ஆகிய தினங்களில் நடைபெறும்.

  Read More : பிளஸ்2 முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு HCL-ல் பணிபுரிய வாய்ப்பு - பயிற்சியுடன் கூடிய வேலை!

  முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க 2022-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1-ஆம் நாள் உள்ளாட்சிகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்துதல், கண்காட்சி நடத்துதல், சிறந்த ஊழியர்களை அங்கீகரித்தல் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

  உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் நவம்பர் 1 ஆம் நாளினை உள்ளாட்சிகள் தினமாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிகுழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட செயல்பாடு ஆகியன குறித்து விவாதிக்கப்படும்.

  மேலும் கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை நிகழ்நேரத்தில் கண்காணித்திடும் வகையில் நம்ம கிராம சபை' என்கிற கணிணி/தொலைபேசி மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி கிராம சபை நிகழ்வுகளை கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் ஊரக வாழ் பொதுமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டு விவாதத்தில் பங்கு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Tamil Nadu