காவலரை ஒருமையில் திட்டிய காஞ்சிபுரம் ஆட்சியருக்கு நோட்டீஸ்!

இந்த விவகாரத்தை மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளது.

Web Desk | news18-tamil
Updated: August 13, 2019, 2:17 PM IST
காவலரை ஒருமையில் திட்டிய காஞ்சிபுரம் ஆட்சியருக்கு நோட்டீஸ்!
காஞ்சிபுரம் ஆட்சியர்
Web Desk | news18-tamil
Updated: August 13, 2019, 2:17 PM IST
அத்திவரதர் தரிசன பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல் ஆய்வாளரை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் திட்டிய விவகாரத்தில் 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மனிதஉரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக இருந்த காவல் ஆய்வாளர், விஐபி வரிசையில் பொதுமக்களை அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக குற்றம்சாட்டிய காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, காவலரை ஒருமையில் திட்டி, தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.Loading...

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சைக்குள்ளானது. சீருடை அணிந்த காவலரை காஞ்சிபுரம் ஆட்சியர் பொது இடத்தில் வைத்து ஒருமையில் திட்டியதற்கு தமிழ்நாடு காவலர் குடும்ப நலக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த விவகாரத்தை மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளது.
பொதுமக்கள், காவலர்கள் முன் காவல் ஆய்வாளரை திட்டியது மனித உரிமை மீறல் என தெரிவித்துள்ளது.

மேலும் காவல் ஆய்வாளரை திட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர், டிஜிபி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

Also Watch

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...