• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 12th Mark Sheet : 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் குளறுபடி - பள்ளிகளுக்கு நோட்டீஸ்

12th Mark Sheet : 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் குளறுபடி - பள்ளிகளுக்கு நோட்டீஸ்

பள்ளி மாணவிகள்

பள்ளி மாணவிகள்

12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
    12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் குளறுபடி நடந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    கொரோனா பரவல் காரணமாக, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தாமல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புக்கு, ஏதாவது ஒரு நாள் வந்திருந்தாலும், அவர்களுக்கு மதிப்பெண் தரப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், பிளஸ் 1 படிப்பில் இருந்து இடைநிறுத்தம் செய்து, மாற்று சான்றிதழ் வாங்கிய மாணவர்களும், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இது குறித்து, மாணவர்களின் முந்தைய ஆண்டு மதிப்பெண் பட்டியல் மற்றும் அவர்களின் வருகை பதிவு விபரங்களை, பள்ளிகளில் இருந்தே வழங்கியதாக, முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தவறான தகவல் அளித்த பள்ளிகளில் விசாரணை நடத்த, பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் தேர்வுத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, மாற்று சான்றிதழ் வாங்கிச் சென்ற மாணவர்களையும், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பட்டியலில் இடம் பெற செய்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி, 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலுக்கு, மாற்ற சான்றிதழ் (TC) வாங்கிய மாணவர் விவரங்களையும் இணைத்து, தவறான தகவல்களை அளித்தது தொடர்பாக, உரிய விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    12ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்க 27 ஆம் தேதி (நாளை) கடைசி நாளாகும். கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால், 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளனர்.

    Must Read : ஆகஸ்ட் 1 முதல் மாத சம்பளம், ஓய்வூதியம், இஎம்ஐ கட்டணத்திற்கு புதிய விதி - மாற்றம் செய்த ஆர்பிஐ

    12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் திருப்தி இல்லாதவர்கள் மற்றும் பள்ளிகளில் படிக்காமல் பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனி தேர்வர்கள் ஆகியோர், தேர்வுத்துறை நடத்தும் தேர்வில் பங்கேற்கலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் அறிவித்துள்ளார். இந்த தேர்வுகள், ஆகஸ்ட்டு 6ஆம் தேதி தொடங்கி, ஆஸ்ட்டு 19 ஆம் தேதி வரை பாடவாரியாக நடைபெற உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    இந்த தேர்வை எழுத விரும்புவோருக்கு, 23ஆம் தேதி முதல் விண்ணப்ப பதிவு தொடங்கியது. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். அதற்குள்ளாக விண்ணப்பிக்க முடியாதவர்கள் ‘தட்கல்’ சிறப்பு கட்டண திட்டத்தில், வரும் 28ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என்றும், அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: