Home /News /tamil-nadu /

போயஸ்தோட்டத்தில் சசிகலா புதிதாக கட்டும் வீட்டிற்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

போயஸ்தோட்டத்தில் சசிகலா புதிதாக கட்டும் வீட்டிற்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

சசிகலா

சசிகலா

சென்னை போயஸ் தோட்டத்தில் சசிகலா புதிதாக கட்டும் வீட்டில் வருமான வரித்துறை, நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பினாமி பெயரில் சொத்து சேர்த்ததாக, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சசிகலாவின் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது.

    இதன் தொடர்ச்சியாக பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், சசிகலாவின் 65 சொத்துகள் கண்டறியப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடக்கப்பட்டன. இந்த சொத்துகளை 2003ல் இருந்து 2005ம் ஆண்டு வரை, ஹரிச்சந்தனி எஸ்டேட்ஸ் என்ற பெயரில் சசிகலா வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது.



    போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் பல்வேறு இடங்களில் 200 ஏக்கர் அளவிலான இந்த சொத்துகளின் மதிப்பு, 300 கோடி ரூபாய் எனவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த 300 கோடி சொத்துகளில் ஒன்றான சென்னை போயஸ் தோட்டத்தில் சசிகலா புதிதாக கட்டும் வீட்டில் வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க....பயிற்சியில்தான் இருக்கிறேன்: சி.எஸ்.கேவில் என்னைப் பார்க்கலாம் - மனம் திறந்த சுரேஷ் ரெய்னா

    சிறையில் இருந்து வெளியில் வந்த உடன் சசிகலா தங்க உள்ளதாக கூறப்பட்ட வீட்டில்தான் தற்போது நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Sasikala Pushpa

    அடுத்த செய்தி