போக்குவரத்து ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்... போடாதவர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்க இயலாது என அறிவிப்பு

பேருந்து

போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி போக்குவரத்து துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 • Share this:
  போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி போக்குவரத்து துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “மாநகர போக்குவரத்துக் கழகம் பொதுமக்களிடம் நேரிடையாக சேவை செய்யக்கூடிய மிகப் பெரிய சேவை நிறுவனமாகும். குறிப்பாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் நபர்களிடம் தொடர்புகொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. இதனால், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது.

  தற்போது கொரோனா 2 ஆவது அலை காரணமாக, கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில், கட்டாயமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

  எனவே, கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும், பெருந்தொற்றான கொரோனா வைரஸ் தாக்காமல் தடுக்கும் பொருட்டு, அரசின் தற்போதைய வழிகாட்டுதலின் படி, 45 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்கள் அனைவரும் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் தடுப்பு ஊசிகளை கட்டாயம் வெலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.

  சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அல்லது கிளை மேலாளர்கள் 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி கட்டாயம் செலுத்தி பயனடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  மருத்துவர்களின் அறிவுறுத்தல் காரணமே அன்றி, மேற்குறிப்பிட்டுள்ள தடுப்பு ஊசியை சொலுத்திக் கொள்ள தவறும் பட்சத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுமாயின், சிறப்பு விடுப்பு கோரும் பட்சத்தில், சிறப்பு விடுப்பு வழங்கிட இயலாத சூழ்நிலை ஏற்படும் என்பதையும் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு, இச் சுற்றறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Must Read : திருச்சியில் தொலைதூரப் பேருந்துகளில் ஆட்கள் குறைவு... மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணம்

   

  இந்நிலையில், 50 சதவிகிதம் போக்குவரத்து ஊழியர்கள் கோரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: