அசைவ பிரியர்களுக்கு ஷாக்.. மீன்பிடி தடைகாலத்துக்கு இடையே கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
அசைவ பிரியர்களுக்கு ஷாக்.. மீன்பிடி தடைகாலத்துக்கு இடையே கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
கோழிகள்
Chicken Shops Closure | கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகளை கண்டித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு வருகிற 29-ஆம் தேதி முதல் முழுமையான வேலைநிறுத்தத்தில் கறிக்கோழி விற்பனையாளர்கள், வளர்ப்பவர்கள் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வருகிற 29ம் தேதி முதல் கறிக்கோழி விற்பனையாளர்கள் , கறிக்கோழி வளர்ப்பவர்கள் கறி கோழி கடைகளை மூடி வேலை நிறுத்தம்விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 2.5 லட்சம் கறி கோழி விவசாயிகள் உள்ளனர். இவர்கள் உற்பத்தி செய்த கறி கோழிகளை சம்பந்தப்பட்ட கறி கோழி பண்ணையில் மொத்தமாக விற்பனை செய்கின்றனர்.இந்த நிலையில் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வந்த மூலப்பொருட்கள் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இடுபொருட்கள் விலை உயர்வால் முறை படுத்தாத குறைந்தபட்ச வளர்ப்பு தொகை மற்றும் அடுக்கு விகிதம் போன்ற காரணங்களால் விவசாயிகள் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் கறிக்கோழி நிறுவனங்களில் ஏற்படும் முறையற்ற செயலை கண்டித்து 29-4-2022 ஆம் தேதி முதல் முழுமையான வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள கறிக்கோழி பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கறிக்கோழி வளர்ப்போர் நல சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்து வேலை நிறுத்த அறிவிப்பு செய்தனர். இதற்கு முன்னதாக கறிக்கோழி வளர்ப்பு தொகை தொடர்பான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகளை கண்டித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு வருகிற 29-ஆம் தேதி முதல் முழுமையான வேலைநிறுத்தத்தில் கறிக்கோழி விற்பனையாளர்கள், வளர்ப்பவர்கள் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதேநேரத்தில் மாவட்ட நிர்வாகம் கோழி வளர்ப்பு நிறுவனங்களிலிருந்து விவசாயிகளுக்கு சுமுகமான நிலை ஏற்படுவதற்கு உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் : ரவிச்சந்திரன் ராஜகோபால்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.