ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘ஆ. ராசாவின் பேசியதில் எந்த தவறும் கிடையாது’ – சி.பி.எம். மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கருத்து

‘ஆ. ராசாவின் பேசியதில் எந்த தவறும் கிடையாது’ – சி.பி.எம். மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கருத்து

செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் கே. பாலகிருஷ்ணன்

செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் கே. பாலகிருஷ்ணன்

நீலகிரி எம்.பி ஆ.ராசாவின் பேச்சில் எந்த தவறும் கிடையாது. ஆ.ராசா பேசிய மேடையில் நானும் இருந்தேன். அவரது பேச்சை வெட்டி ஒட்டி திரித்து ஒளிபரப்பி இருக்கின்றனர். - கே. பாலகிருஷ்ணன்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நீலகிரி எம்.பி ஆ.ராசா சட்டத்திற்கு புறம்பாகவோ, யாரையும் புண்படுத்தும் விதமாகவோ பேசவில்லை என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

  கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

  ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் எப்படி அனுமதி அளித்தது என தெரியவில்லை. சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்கள் வரம்புக்கு உட்பட்டு செயல்படுகின்றதா என தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து அந்த அமைப்பினர் ஏற்கனவே நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலங்களை பார்க்க வேண்டும்.

  காந்தி ஜெயந்திஅன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு என்ன வேலை?. காந்தியை கொன்றதை கொண்டாடியவர்களுக்கு ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்து இருக்கின்றனர். அந்தந்த ஊரில் காவல்துறை முடிவு செய்ய வேண்டியதை நீதிமன்றங்கள் முடிவு செய்கின்றன.

  ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது சாத்தியமில்லை.. உயர் நீதிமன்ற மதுரை கிளை

  நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சியாக இருக்கிறது. பயங்கரவாத அமைப்பு பின்னாடி நீதிமன்றம் செல்வது வேதனையானது. சவுக்கு சங்கர் என்பவரின் கருத்துகளில் உடன்பாடு கிடையாது என்றாலும் நீதிமன்ற அவமதிப்பில் அவருக்கு அதிகபட்சமாக தண்டணை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் அந்தளவு தண்டணை கொடுத்தது கிடையாது. .சிபிஐ,சிபிஎம், வி.சி ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மனித நேய மனித சங்கிலி போராட்டம் அக்டோபர் 2 ம் தேதி நடத்த இருக்கின்றோம்.

  மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைவது பா.ஜ.க , ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுகு கண்களை உறுத்துகின்றது. ஆன்லைன் ரம்மி சட்டத்தினை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கின்றனர். இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

  தமிழகத்தில் வன்முறையை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு பணமதிப்பு குறைந்த உள்ளது, பங்கு சந்தை வீழ்ச்சியடைந்தே இருக்கின்றது. இவற்றை மூடி மறைக்க பா.ஜ்கவினர் தொடர்ந்து சச்சரவுகளை கிளப்பி திசை திருப்பி வருகின்றனர்.

  அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை - காரணம் என்ன?

  பொது மக்கள் பொருளாதார நடவடிக்கைகள் கவனம் செலுத்தி விடக்கூடாது என்பதற்காக இது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

  பெட்ரோல் குண்டு வீசுபவர்களுக்கு எதிராக காவல் துறை உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயல்கின்றனர்.

  நீலகிரி எம்.பி ஆ.ராசாவின் பேச்சில் எந்த தவறும் கிடையாது. ஆ.ராசா பேசிய மேடையில் நானும் இருந்தேன். அவரது பேச்சை வெட்டி ஒட்டி திரித்து ஒளிபரப்பி இருக்கின்றனர். வர்ணாசிரம தர்மத்தில் சூத்திரனை வேசியின் மகன் என்று சொல்லி இருப்பதை சொன்னார். இதற்கு வர்ணாசிரம தர்மத்தின் மீதுதான் கோவம் இருக்க வேண்டும். ஆனால் அதை எடுத்து சொன்னவர் மீது கோப்பட கூடாது.

  இறை நம்பிக்கை இருக்கின்றவர்களையும் மனுதர்மம் சூத்திரன் என்றுதான் சொல்கின்றது. ஆ.ராசா சட்டத்திற்கு புறம்பாகவோ, யாரையும் புண்படுத்தும் விதமாகவோ பேசவில்லை. ஆ.ராசாவை மட்டும் குறிவைத்து பா.ஜ.க விமர்சிப்பது சாதிய கண்ணோட்டம் என்றுதான் பார்க்க தோன்றுகின்றது. இதை வைத்து பா.ஜ.க அரசியல் நாடகம் ஆடுகின்றது.

  இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

  செய்தியாளர் – குருசாமி, கோவை

  Published by:Musthak
  First published:

  Tags: TamilNadu Politics