முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா...! தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா...! தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா-வை சேர்ப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கு செலுத்த விரும்பவில்லை என்றால் நோட்டோ-வில் பதிவு செய்யலாம். இந்த முறையை உள்ளாட்சித் தேர்தலில் அமல்படுத்த கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில், வேட்புமனு தாக்கல் முடிந்து விட்டதால், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் நோட்டோ குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இருப்பினும், அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவை ஏன் சேர்க்க கூடாது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அத்துடன், இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

First published:

Tags: Local Body Election 2019