Home /News /tamil-nadu /

ஜெய்பீம் திரைப்படத்தை அங்கீகரிக்கக் கூடாது: மத்திய, மாநில அரசுகளுக்கு வன்னியர் சங்கம் மனு

ஜெய்பீம் திரைப்படத்தை அங்கீகரிக்கக் கூடாது: மத்திய, மாநில அரசுகளுக்கு வன்னியர் சங்கம் மனு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டவோ, அங்கீகரிக்கவோ தேசிய விருது போன்ற விருது வழங்கவோ கூடாது என வன்னியர் சங்கம் சார்பாக மத்திய , மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    ஜெய் பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட வன்னியர்கள் தொடர்பாக தவறான காட்சிகள், வசனங்கள் போன்றவை இருப்பதாலும், சமூக நல்லிணத்துக்கு பங்கம் விளைவிப்பதாலும் அப்படத்தை அங்கீகரிக்கக் கூடாது என மத்திய, மாநில அரசுக்கு வன்னியர் சங்கம் சார்பாக வழக்கறிஞர் பாலு மனு அனுப்பியுள்ளார்.

    நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில்  வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் குரு பற்றி அவதூறு பரப்பும் வகையிலும் வன்னியர்களின் அடையாளமான அக்னிகுண்டம் தொடர்பாகவும் காட்சிகள் வைத்திருப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

    இது தொடர்பாக ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் சார்பாக தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், படம் வெளியான ஓடிடி தளமான அமேசான் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜெய்பீம் விவகாரம் தொடர்பாக   திரைப்பட  விழா நடத்துவதற்கான இயக்குநர்,   மத்திய  தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலாளர், தமிழக தகவல் மற்றும் பொதுவிவகாரத் துறை செயலாளர் ஆகியோருக்கு வன்னியர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்  பாலு மனு அனுப்பியுள்ளார்.

    இதை படிக்க: ஜெய் பீம் சர்ச்சை: பா.ம.க-வை விமர்சனம் செய்துள்ள திமுக-வின் முரசொலி நாளேடு


    அதில், “ அக்னி குண்டம் என்பது வன்னியர்களின் புனித சின்னமாக பல நூற்றாண்டுகளாக உள்ளது.  இதேபோல் குரு என்பது வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவரின் பெயர். ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னி குண்டம் மற்றும் குருவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர வன்னியர் சங்கம் தொடரவுள்ளார்.

    எனவே, ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டவோ, அங்கீகரிக்கவோ தேசிய விருது போன்ற விருது வழங்கவோ கூடாது என வன்னியர் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: பொங்கல் தொகுப்பு: ரேஷன் கார்டுக்கு ரூ.2500 வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Actor Surya, Jai Bhim, Vanniyar

    அடுத்த செய்தி