“தேர்தல் அறிக்கையை குப்பையிலதான் போடனும்; 7 பேரை விடமாட்டோம்” - சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி

தமிழிசை மாநில அந்தஸ்தில் உள்ளவர் என்றும், அவருக்கு டெல்லியின் கொள்கை தெரியாது என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் 5 தொகுதிகளே பாஜகவுக்கு கிடைத்துள்ள நிலையில், இதனை கூட்டணி எனக் கூற முடியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், அதனால் தோற்றாலும் பரவாயில்லை என்றும் அவர் தெரிவித்தார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஏழு பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை எனத் தெரிவித்தார். கூட்டணியின் தேர்தல் அறிக்கையை குப்பையில் தான் போட வேண்டும் என்றும், ஒருபோதும் 7 பேரை விடுவிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல், பாஜக தமிழக தலைவர் தமிழிசை மாநில அந்தஸ்தில் உள்ளவர் என்றும், அவருக்கு டெல்லியின் கொள்கை தெரியாது என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வலியுறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Published by:Yuvaraj V
First published: