ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை

 கிரிவலம்

கிரிவலம்

Tiuvanamalai Girivalam | இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4.14 மணி முதல் 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 6 மணி வரை உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் முருகேஸ் உத்தரவிட்டுள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகிற 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் கடந்த 14-ம் தேதி முதல் வருகிற 18 -ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறமுள்ள மலையை சுற்றி பௌர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4.14 மணி முதல் 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 6 மணி வரை உள்ளது.

  Also Read : தமிழகத்தில் முழு ஊரடங்கு: கேரள எல்லை களியக்காவிளையில் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

  இந்த மாத பவுர்ணமி கிரிவலத்திற்கும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பவுர்ணமி சமயத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என்றுள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Tiruvanamalai