நான் பா.ஜ.க-வில் இணையவில்லை - திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்

பிரதமர் மோடியை குறைக்கூறும் ராகுல்காந்தி உடனான உறவை துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினை எம்.எல்.ஏ. கு.க. செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்

  • Share this:
தான் பாஜகவில் இணையவில்லை என்றும், தொகுதி விவரங்கள் குறித்து தான் ஜே.பி.நட்டாவை சந்தித்ததாக திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் கூறியுள்ளார்.

திமுக சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து அம்மாவட்ட பொறுப்பில் வருவதற்கு அக்கட்சியினர் இவையே கடுமையான போட்டி நிலவிய சூழலில் யாரும் எதிர்பாராத வண்ணம் அம்மாவட்ட திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டார்.  சீனியர்கள் பலர் இருக்கையில் சிற்றரசு நியமிக்கப்பட்டதால் கட்சியின் மூத்த நிர்வாகி சிலர் கடுமையான அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.


இந்த நிலையில்தான் சென்னை மேற்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளரமான கு.க. செல்வம் கடுமையான அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இதனால் பாஜகவில் இணைவதற்காக அவர் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று மாலை டெல்லியில் ஜே.பி நட்டாவை கு.க.செல்வம் சந்தித்துள்ளார். இதற்குபின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”நான் பாஜகவில் இணையவில்லை தொகுதி விவரங்கள் குறித்து தான் ஜே.பி.நட்டாவை சந்தித்தேன். திமுகவில் உட்கட்சி தேர்தலை ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டுமென்றும் தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை கண்டிக்க வேண்டுமென்றும்” கூறி உள்ளார்.
மேலும், பிரதமர் மோடியை குறைக்கூறிக்கொண்டிருக்கும் ராகுல்காந்தி உடனான உறவை துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினை எம்.எல்.ஏ. கு.க. செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading