தமிழகத்தின் பல பகுதிகளில் ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கி ரூ.2,000 வழங்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

Youtube Video

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரேஷன் கடைகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் நிவாரண நிதி மற்றும் மளிகை பொருள் தொகுப்பு சென்றடையாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

 • Share this:
  கொரோனா நிவாரணத்தின் இரண்டாவது தவணையான 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜுன் 3ம் தேதி தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதற்காக, வீடுகள்தோறும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. ஒரு நாளைக்கு 200 பேர் பணம் வாங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. சனிக்கிழமை முதல் 2 ஆயிரம் ரூபாய் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையின் பெரும்பாலான நியாய கடைகளுக்கு பணம் வந்து சேரவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நீண்ட நேரம் டோக்கனுடன் காத்திருந்தும் பணம் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறினர்.

  பாண்டிபஜாரில் உள்ள ரேசன்கடையில், டோக்கன் கொடுக்கப்பட்டும் பணம் வழங்கப்படாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

  அதேபோல கோவை நகரத்திலும், ரேசன் கடைகளில் இரண்டாம் தவணையான 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் 14 வகை மளிகைப்பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால் அங்கேயும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனிடையே பரமக்குடியில் பிரதமரின் அரிசி திட்டம் மூலம் கொரோனா கால நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5 கிலோ அரிசி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், பரமக்குடியில் நாளொன்றுக்கு 200 பேருக்கு டோக்கன் முறையில் அரிசி வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 72 ஆயிரம் குடும்பத்தினர் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: