மூச்சுக்குழாய்க்குள் சென்ற மூக்குத்தி... அறுவை சிகிச்சையின்றி அகற்றி மருத்துவர்கள் சாதனை...!

மூச்சுக்குழாய்க்குள் சென்ற மூக்குத்தி... அறுவை சிகிச்சையின்றி அகற்றி மருத்துவர்கள் சாதனை...!
  • News18
  • Last Updated: January 4, 2020, 10:56 AM IST
  • Share this:
புதுக்கோட்டையில் மூச்சுக்குழாய்க்குள் சென்ற மூக்குத்தியின் திருகாணியை அறுவை சிகிச்சை இன்றி அகற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பட்டமாள் விடுதியை சேர்ந்தவர் புஷ்பம். 55 வயது நிறைவடைந்த இவருக்கு கடந்த ஒரு மாதமாக வறட்டு இருமல் இருந்துள்ளது. இந்நிலையில் இருமும் போது ரத்தம் வர தொடங்கியவுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அங்கு அவரை சோதனை செய்ததில் மூக்குத்தியின் திருகாணி ஒன்று நுரையீரலுக்கு செல்லும் மூச்சுக்குழலில் சென்று அடைத்து கொண்டிருப்பது தெரியவந்தது. மூக்குத்தி கழன்று கீழே விழாததாலும், திருகாணி நுரையீரலில் அடிப்பகுதிக்கு சென்றுவிட்டதாலும் என்ன நடந்தது என உணராமலே புஷ்பம் இருந்திருக்கிறார். இதனை அடுத்து அறுவை சிகிச்சை ஏதும் செய்யாமல் அகநோக்கி மூலம் திருகாணியை அரசு மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.


தனியார் மருத்துவமனையில் ஒன்றரை லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு மருத்துவர்களின் சாதுர்யமான சிகிச்சையால் புஷ்பா தற்போது முழு நலம் பெற்றிருப்பதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறுகிறார்.

நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கு முன்பாகவே புஷ்பாவை மீட்டு மறுவாழ்வு கொடுத்த புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிய தொடங்கியுள்ளன.
 
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்